Sunday, December 30, 2012

புத்தாண்டு

இந்த வருட நாட்குறிப்பை
அன்பளிக்க வேண்டாம்
இயற்கைமீது அன்பு கொண்டோர்
அதனை வாங்க வேண்டாம்

புதிய நூல்கள் ஒருவர் வாங்கி
குடும்பம் கூடி வாசிப்போம்
பகிர்வில் அறிவும் அன்பும் பெருகும்
"பண்பு இலவசம்" யோசிப்போம்

மலிவு விலையில் கிடைக்கும் மதுவில்
விலையில்லா உயிரை இழக்காமல்
சேர்த்த பணத்தை பொதுவில் வைத்து
பகிர்ந்து வாழப் பழகுவோம்

அடுக்குமாடி விடுதிகளில்
கற்பை ஏலம் போடாமல்
ஆலயங்களில் கண்கள் மூடி
ஆண்டவனிடம் வேண்டுவோம்
2013ல் எங்களையும் இந்தியாவையும்
இறைவா காப்பாற்று - எங்களிடமிருந்து

Tuesday, December 25, 2012

கற்பழிப்பு

கற்பழிப்பு!
கற்பு + அழிப்பு
கற்பு + பழிப்பு
பிரித்தறிய தேவையில்லை
பகுத்தறிவோம்!

நாய்கள் பெருகிவிட்ட வீதிகளில்
மனிதர்கள் வேட்டையாடல்!
உறவுகளை தொலைத்துவிட்டு
அடுக்ககங்களில் மடிக்கணினியில்
மணிக்கணக்கான தேடல்..
முடிவில் கிடைக்கிறது
சொந்தக் குழந்தையின் கற்பழிப்பு செய்தி
பங்குச் சந்தையில்!

Sunday, November 18, 2012

இன்னும் அதிகம்

தாய் தந்த பாலெல்லாம் சாக்கடை ஆக்கி
அவள் அடிவயிற்றின் நெருப்பில் காய்ச்சிய
அவள் கண்ணீரைக் குடி
போதை இன்னும் அதிகம் கிடைக்கும்

குடியில் மிதக்கும் இளமை
தற்கொலைக்கு துணியும் கோழைகள்
காதலாய் பார்க்கும் சகோதரத்துவம்
முரண்களின் மூட்டையாய் சமுதாயம்!

எல்லா மதிப்பீடுகளையும் தொலைத்துவிட்டு
எதன்மீது எழும் நம் எதிர்காலம்
அதுவும் குடித்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளும்

Thursday, October 25, 2012

மழையுதிர் காலம்

1996 முதல் கவிதை எழுதி வரும் ஒரு கவிஞனாக என் ஆதங்கத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இன்றைய தினமலர் நாளிதழில் "அங்காடி தெரு" பகுதியில் ஒரு பக்க அளவில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அது ஒரு நாடகத்தை பற்றியது.. நாடகம் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதன் தலைப்பு 2008 வெளியாகி சில தொலைக்காட்சி நூல் விமர்சனத்திலும், அதை தொடர்ந்து சில தொலைகாட்சிகளில் பிரத்தியேக நேர்காணலும், ஒரு இலக்கிய அமைப்பின் கவிஞர் கண்ணதாசன் விருதும் பெற்று இன்னும் பல ஊடகங்களின் வாயிலாக பிரபலம் அடைந்த என் முதல் கவிதை நூலான "மழையுதிர் காலம்" என்பதே என் ஆதங்கத்தின் காரணம்.

இது மட்டுமல்ல! "எத்தன்"  என்ற தமிழ் திரைப்படத்திலும் என் நூலின் தலைப்பு பிரபல திரைப் பாடலாசிரியர் ஒருவரால் ஒரு பாடலின் பல்லவியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

இங்கே ஒரு வேண்டுகோள்!

 ஒருவரின் படைப்பை எடுத்து கையாளும்போது அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் சொல்ல்வது அந்த எழுத்தாளருக்கு லருக்கு நாம் செய்யும் கண்ணியம் ஆகும். அதை தவறவிட்டு தம் படைப்பு போல் காட்டிக் கொள்வது ஒரு படைப்பாளிக்கு அழகல்ல.

Saturday, July 28, 2012

வானம் இறங்கி வரும்

tdj;NjhL tho;e;jtiu
kdj;NjhL tho;e;jtH ehk;kz;NzhLk; kdj;NjhLk;
gif nfhz;Nlhk;
tpz;Zk; gifj;jJ!
 
ek; $iu neUg;gpy;
ehNk FspH fha;tNjh?!
kz;kPJ mwptpaypd;
gilnaLg;G mJjhd;

fsp kz;NzhL tpisahLk;
gps;is Fzk; njhiyj;j
jiyKiwf;Fs; ,dp
tpisahl;L nkd;nghUl;fs;
td;Fzq;fs; tpijf;Fk;

fOj;J epw;fh tajpy; ngw;w
jhapd; fjfjg;ig
js;shLk; mtSf;F
jUtjpy;iy gyUk;
kLfha;e;j gRtpid
mWj;J ghy; NjLfpd;w
mwj;Jg; ghy; gUfh
kdq;fis vd; nrhy;y!

kdpjj;ij kdjpYk;
kz;zpYk; tpij!frpfpd;w kdNjhL
if nfhL- nfhil
gzj;jpir tpl;L
,d;NwhL khwl;Lk; eil
thdk; ,wq;fp tUk;
மஷூக் ரஹ்மான்

Tuesday, July 3, 2012

வெப்பம்!

ஒரு துளி நெருப்பிலும்
எரிக்கின்ற வெப்பம்!

ஒரு துளி மழையிலும்
உயிர் பூக்கும் குளிர்

ஒரு துளி கண்ணீரில்..
இன்று எதுவும் எரிவதில்லை

துடைக்கின்ற கைகள் அழிக்கின்றன...
கண்ணீராய் வழியும் தன்மானத்தை!

மஷூக் ரஹ்மான்

Thursday, April 19, 2012

அறிவு என்பது?


எத்தனை சிந்தித்தாலும்
எதனை நிந்தித்தாலும்
அறிந்தாலும் இல்லையென்றாலும்
மொழிந்தாலும் மௌனம் காத்தாலும்
மாறாத மறை பொருள்
அது.. தீராத நிறையருள்!

பேசிப் பொழுதோட்டி
வாதித்து வகையற்று
பேதலித்து நில்லாமையே

இதுவும் கவிதை என்று கொள்ளாமையே

Sunday, April 15, 2012

ஆடுகளம்

மாணவர் தற்கொலை
ஆசிரியர் கைது!
மாணவர் கொலை - கைது!
சக மாணவர்!
ஆசிரியர் கொலை - மாணவர் கைது
இறந்தது.. கல்வியின் பயன்பாடு!