Friday, July 16, 2010

நிறைமதிக் குறள்

பார்த்த இரவு
பழகிய நிலவு
பார்த்துப் பழகிய நிழல்!
என் காலில் விழுந்த நிழல் கேட்டது
நிறைமதி மேலொரு குறள்!

முற்றம் தோன்றா நிறைமதி முற்றம்
கொள்ளும் மதியின் பெயர்

அகர முதலும் ஆகும் நிறைமதி
காதல் வளர் கவிக்கு

தோன்றா நிறைமதி பாடாக் கவிதைகள்
வாழா மதியிலி வான்

ஒற்றை நிறைமதி மல்லிகை ஏந்தும்
கற்றைக் குழல் இரவு

ஊட்டும் அமுதும் காட்டும் நிறைமதி
சேய்க்கு தாயது வாம்

பாரா ரோகம் தீர்க்கும் நிறைமதி
மாண்பார் செந்தமிழ்ப் பெண்

தேயா நிறைமதி யில்லை தேய்ந்தும்
தேயா நெடு நெஞ்சத்துள்

எத்தனை நூற்றும் தீரா நிறைமதி
கண்ணன் ஈந்த துகில்

ஏக்கம் தாக்கம் தருமாம் நிறைமதி
ஆக்கும் கவிதைத் தொழில்

மதிநிறை நிறைமதி தேயா நெஞ்சத்துட்
தமிழும் தீர்வது இல்

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

No comments:

Post a Comment