எண்ணும் எழுத்தும் கண் - என
உண்டொரு செந்தமிழ்ப் பண் - இன்று
கவிதைகள் பிறப்பது பெண்களின் கண் - இதைச்
சகியுமோ என் தமிழ் மண்?!
சக்தியை இழக்குது சொல்
சமுதாயத்தை மாற்றிடும் இலக்கொன்று கொள்!
இலக்கில்லாத இலக்கியம் இல்
வெறும் காதலை இலக்கென கொள்ளாமல் நில்
பாதைகள் வகுத்துச் செல்
பல நன்மைகள் எழுத்தாலே ஆக்கிடக் கல் - இது
கவிதையின் கனிவான சொல்
தமிழை மதித்தால் எந்தன் சொல் வழி செல்!
http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/
Friday, July 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment