Tuesday, November 18, 2008

விழியில்...

இமைவிட்டு நழுவியதும்
இதழால் பிடித்தேன், மொழியானாள்
அவளை வரைந்த தூரிகையின்
ஒரு துளி குடித்தேன், உயிரானாள்

இல்லாத மொழி ஒன்று
நா பேச துவங்கியதும்
தள்ளாடும் நெஞ்சினிலே
மதி மழை விழுகிறதே!

அவள், உயிருக்குள் குளிராக
காதல், சுடும் வெய்யில் கதிராக
இரு துருவத்தின் வானிலையும்
என்னுள்ளே சதிராட

காதல் காதல் காதல் ...
என் உயிரும் மரணமும் ஆகியதே!

No comments:

Post a Comment