குளிர்பிறையின் கூர்நுனியில்
பனித்துளியாய் நின்றிருந்தேன்
அல்லி அவள் மடியினிலே
விழுவதற்காய் தவமிருந்தேன்
இரவின் வெளி என் மனதின் தாகத்தில் தீ வார்க்க,
பிறை வெளிச்சம் போதவில்லை
என்னவளின் முகம் பார்க்க…
மொட்டாய் நின்றவள் மலர்ந்தாள்
தன் இதழ்களை திறந்தாள்
மின்னல் கொடியினில் இறங்கி
அவள் மனதினில் நிறைந்தேன்
Tuesday, October 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment