எத்தனைக் கவிஞனின் பெருமூச்சோ?
நீ இத்தனை இதமாய் தீண்டுகிறாய்!
மெத்தென மோதிடும் தென்றலே
நெஞ்சம் பித்துற்று அலையுது காண்க நீ!
தேடி வந்து இளைப்பாற்றும் சரணாலயம்
நீ உருவில்லா ஓங்காரச் சரணா லயம்
கண்படா வீணையே - பிறர்
கண்படும் என்றே - உனை
கண்விட்டு மறைத்ததோ காலம்?
கண்படாதாகிலும் சொல் படும்
உனைத் தமிழின் கண் படிப்பேன் சாற்று!
உனைக் காமுறும் நெஞ்சுக்கு
கள்ளில்லை மாற்று - கொடுங்காதலும்
நஞ்சாகும் காண்!
பேசாமல் கண்மூடி உன்னோடு கரைவதாய்
கற்பனையில் மிதக்கும் ஊண்
தூணின்றி குடை விரிக்கும் மனதில் வான்
No comments:
Post a Comment