வரலாறு காணாத மௌனம்
முன்னேற்றம் பற்றிய கேள்விக்கு
வரலாறு காணாத வளர்ச்சி
பண வீக்கத்தில்
வரலாறு காணாத வீழ்ச்சி
பண்பாடு கலாசாரத்தில்
வரலாறு காணாத விழிப்புணர்வு
பயிலும் வயதில் பாலுணர்வுத் தூண்டுதலில்
வரலாறு காணாத விளைச்சல்
ஊழல் கழனியில் பணப் பெருச்சாளிகள்
வரலாறு காணாத இளைய சமூகம்
சொந்தத்தின் வேர் கூட தெரியாத நிலையில்
வரலாறு காணாத பாதுகாப்பு
இல்லாத சுதந்திரத்தை காபாற்றுதற்கு
No comments:
Post a Comment