Thursday, December 30, 2010

மறுமலர்ச்சி

விடியல் போல் வஞ்சகமின்றி
புன்னகை செய்வோம்

வெயிலிலா வெளிச்சமாய்
நண்பு கொள்வோம்

தாயின் மனம்போல்
கருணை செய்வோம்

பிறரில் நம்மைக் காண்போம்
நமக்கு நாமே நீதி செய்வோம்

யாவரும் ஒன்றென்ற பழமை மறவாத
புதுமை காண முரசறைவோம்

ஓம் ஓம் ஓம்

http://mashookpoetry.blogspot.com/
http://mashookrahman.com/

2 comments: