1996 முதல் கவிதை எழுதி வரும் ஒரு கவிஞனாக என் ஆதங்கத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இன்றைய தினமலர் நாளிதழில் "அங்காடி தெரு" பகுதியில் ஒரு பக்க அளவில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அது ஒரு நாடகத்தை பற்றியது.. நாடகம் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதன் தலைப்பு 2008 வெளியாகி சில தொலைக்காட்சி நூல் விமர்சனத்திலும், அதை தொடர்ந்து சில தொலைகாட்சிகளில் பிரத்தியேக நேர்காணலும், ஒரு இலக்கிய அமைப்பின் கவிஞர் கண்ணதாசன் விருதும் பெற்று இன்னும் பல ஊடகங்களின் வாயிலாக பிரபலம் அடைந்த என் முதல் கவிதை நூலான "மழையுதிர் காலம்" என்பதே என் ஆதங்கத்தின் காரணம்.
இது மட்டுமல்ல! "எத்தன்" என்ற தமிழ் திரைப்படத்திலும் என் நூலின் தலைப்பு பிரபல திரைப் பாடலாசிரியர் ஒருவரால் ஒரு பாடலின் பல்லவியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
இங்கே ஒரு வேண்டுகோள்!
ஒருவரின் படைப்பை எடுத்து கையாளும்போது அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் சொல்ல்வது அந்த எழுத்தாளருக்கு லருக்கு நாம் செய்யும் கண்ணியம் ஆகும். அதை தவறவிட்டு தம் படைப்பு போல் காட்டிக் கொள்வது ஒரு படைப்பாளிக்கு அழகல்ல.